கிராமத்திளிரிந்து வெளிநாட்டு குடியுரிமை மற்றும் குழந்தைகள் வெளிநாட்டு குடிமகன்களாக உள்ளனர். இந்திய பயணத்தின் போது முறைப்படி அவர்கள் இந்திய அரசாங்கத்திடம் தங்கள் இருப்பிடம் குறித்து பதிவு செய்து கொள்வது அவசியம். வெளிநாட்டு அரசாங்க அதிகாரிகள் அந்த நாட்டு குடிமகன்களை பற்றிய தகவல் கேட்கும் பொது இந்திய அதிகாரிகள் எளிதாக தொடர்பு கொண்டு தேவைப்படும் நடவடிக்கைகளை எடுக்க உதவும். இந்திய குடிமகன்களின் வரி பணத்தை சேமிக்கவும் இது உதவும். வெளிநாட்டு குடிமகன்கள் இந்தியா நுழைந்து 180 நாட்களுக்கு மேல் இருந்தால் அதற்கான பதிவை அவசியம் செய்து கொள்ள வேண்டும். அப்படி இல்லையெனில் இந்தியாவை விட்டு வெளியே செல்லும் போது உங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், மறுமுறை இந்தியாவில் நுழையும் அனுமதியும் மறுக்கப்படலாம். இந்த பதிவு தாங்கள் OCI/PIO (Overseas Citizenship of India/Person of Indian Origin) அட்டை வைத்திருந்தாலும் அவசியம். கிராமத்தில் இருந்தால் அருகாமையில் உள்ள இடம்: வெளிநாட்டினர் பதிவு பிரிவு, (Foreigner Regional Registration Office [FRRO] ) காவல்துறை மீமேலர், (Superintendent of police ) தஞ்சாவூர் அல்லது வேறு இடங்களில் இருந்தால் அந்த மாவட்ட மீமேலரை அணுகவும். தமிழ்நாட்டில் இருந்தால் அரசாங்கத்தின் காவல்துறை இணைய தளத்தை பயன்படுத்தவும். http://www.tnpolice.gov.in/ தஞ்சாவூர் மாவட்டத்தின் காவல் துறையினர் விபரங்கள்: http://www.tnpolice.gov.in/District_Details.php?code=29602 தங்களின் பதிவுக்கு எந்த வித கட்டணமும் தேவை இல்லை . தங்களிடம் கட்டணம் வசூலித்தால் அதற்கான ரசீதை பெற்று கொள்ளவும். சான்றாதரவு: http://india.gov.in/overseas/passport/stay_india.php |
பரிவர்த்தனை >