தமிழ்நாடு அரசாங்க திருமண சட்டம் 2009 பற்றிய பதிவு செய்யும் முறை கோப்பு இப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. 1955 ஆம் இந்து திருமண பதிவு சட்டத்தின் கீழ் கீழ்க்கண்ட தகவல்கள் பதிவு செய்வதற்கு தேவை.
தேவைப்படும் ஆவணங்கள்:- இந்து மத/சிறப்பு திருமணம் படிவம் கணவன், மனைவி கையொப்பமிட்டது.
- வயது ஆதராம் (பிறப்பு சான்றிதழ் / கடவு சீட்டு / பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்). குறைந்த பட்சம் 21 வயதாவது இருக்க வேண்டும்.
- குடியிருப்பு ஆதராமாக ஆவணங்கள் தேவை. குடும்ப அட்டை / கடவு சீட்டு ஆதராமாக அமையும்.
- இந்து மத உறுதிமொழி தாளில் கீழ் கண்டவற்றை குறுபிட்டுருக்க வேண்டும்.
- திருமணம் நடந்த இடம்
- திருமணம் நடந்த தேதி
- பிறந்த தேதி
- திருமண தகுதி. (திருமணம் ஆனவரா/ ஆகாதவரா / விவாகரத்து ஆனவாரா )
- எந்த நாட்டை சேர்ந்தவர்
- ஒவ்வொருவரின் கடவு சீட்டு அளவு நிழற்படமும், திருமணம் நடந்த நிழற்படமும் அதில் இணைக்கப்பட்ட வேண்டும்.
- திருமண பத்திரிக்கை இணைக்கவும்.
- இந்து திருமணங்கள் கோவிலில் நடைபெற்று இருந்தால், நடத்திய பூசாரியிடம் அல்லது நிர்வாகத்திடம் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.
- அரசு விதித்திருக்கும் தொகையை மாவட்ட காசாளரிடம் செலுத்தி பெற்ற ரசீதை இதோடு இணைக்கவும்.
- தவிர்க்க படவேண்டிய உறவுமுறைகளில் மணமகனும், மணமகளும் தொடர்பில்லை என்று வாக்குறுதி அளிக்கவும்.
- விவாகரத்து/இறந்தவரின் மணமகனின்/மணமகளின் உறவு இருந்தால், இறந்த/விவாகரத்து சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.
- வேறு மதத்திற்கு மாறி இருந்தால் மத மற்று சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.
- வெளி நாட்டவராக இருந்தால், ஆட்சேபனை எதுவும் இல்லை என்ற சான்றிதழ் அந்த நாடு தூதரகத்திடமிரிந்து இணைக்கப்பட வேண்டும்.
- அனைத்து ஆவணங்களும் அரசின் அதிகாரபூர்வமான அதிகாரியிடம் கையொப்பம் இட்டுருக்க வேண்டும்.
இந்த ஆவணங்கள் அனைத்தையும் அரசு பதிவு அலுவலகத்தில் சமர்பித்து திருமணத்தை பதிவு செய்ய வேண்டும். |