குடும்ப அட்டை மாற்றங்கள்


திருமணத்திற்கு பிறகு குடும்ப அட்டையில் பெயர் நீக்கம் மற்றும் பெயர் சேர்க்க வேண்டும்.

மணமகன் மணமகள் வீட்டிற்க்கு அல்லது மணமகள் மனகன் வீட்டிற்க்கு இந்த இட மாற்ற பதிவு அவசியம்.

குடிபெயர்ந்த நபர் அல்லது தனி குடித்தனம் செல்லும் மணமக்கள்  செய்ய வேண்டியது:
 1. தான் முதலில் வசித்து வந்த இடத்தில் உள்ள குடும்ப அட்டையில் உள்ள பெயரை நீக்க வேண்டும்.
 2. குடி பெயர்ந்துள்ள இடத்தில உள்ள குடும்ப அட்டைக்கு தங்களின் பெயரை சேர்க்க வேண்டும்.
 3. அல்லது மணமக்கள் இருவரும் தனி குடித்தனம் செய்ய வேண்டுமெனின், தங்களின் வீட்டின் குடும்ப அட்டையின் பெயரை நீக்கம் செய்ய வேண்டும்.
 4. பெயர் நீக்கம் செய்ததற்கான சான்றை அந்த அதிகாரியிடம் பெற்று கொள்ள வேண்டும்.
குடும்ப அட்டையில் மாற்றம் செய்ய வேண்டிய இடம்:

உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை,
பட்டுக்கோட்டை வட்ட அலுவலகம் (Taluk Office)

பட்டுக்கோட்டை
தொலைபேசி: +91-4373-235049 / 9445000293
மின்னஞ்சல்: tsotnj.pattukottai@tn.gov.in


அல்லது வெளியூர்களில் இருந்தால்,

அங்குள்ள வட்ட அலுவலகத்தை அணுகவும்.

கீழ் கண்ட ஆவணங்களை அங்கு சமர்பிக்க வேண்டும்:
 1. குடும்ப அட்டை நபர்கள் பெயர் மாற்றம் அல்லது புது குடும்ப அட்டை  விண்ணப்பம்
 2. பெயர் நீக்கிய ஆவணம்
 3. திருமண பதிவு சான்றிதழ்
 4. திருமண அழைப்பிதழ்
 5. மாற்றப்பட்ட வங்கி கணக்கு அல்லது காப்புரிமை ஆவணங்கள் அல்லது கடவு சீட்டு அல்லது வாக்காளர் அட்டை
பெயர் நீக்கம் அல்லது பெயர் சேர்கை உடனே செய்து தர வேண்டும்.

புது அட்டைகளுக்கு:

30 நாட்களுக்குள் சம்பத்தப்பட்ட அதிகாரிகள் சோதனை செய்து அட்டையை வழங்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு விதித்துள்ள கால கெடுவு 60 நாட்கள்.

சான்றாதரவு:
 1. http://www.consumer.tn.gov.in/eligibility_ration.htm
 2. http://www.consumer.tn.gov.in/telephone-numbers.pdf
Comments