சுதந்திர இந்தியாவின் 1969 ஆண்டு, 8 வது பிரிவு சட்டத்தின் படி, குழந்தை பிறந்து 21 நாட்களுக்குள் அவசியம் அரசாங்கத்திடம் பதிவு செய்து வேண்டும். 21 நாட்களுக்கு மேல் பதிவு செய்யவில்லையெனில் அரசாங்கத்திற்கு அபராதம் செலுத்த வேண்டும். பதிவு செய்வதற்கு பிறப்பு சான்றிதழ் படிவம் மட்டுமே வேண்டும். குழந்தை பிறக்கும் இடம் கொண்டு பதிவு செய்யும் இடம் வகை படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடு: வெளிநாட்டில் பிறந்தால் ஒரு வருடத்திற்குள் பதிவு கொள்ள வேண்டும். இந்திய குடியிருமை வேண்டுமெனின் அவசியம் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்படி பிறந்த நாட்டு குடியிருமை இருக்கும் வேளையில், இந்திய குடியிருமை வேண்டாமெனின் பதிவு செய்ய தேவையில்லை. மருத்துவமனை: மருத்துவமனையில் பிறந்தால், சட்டப்படி மருத்துவமனை நிர்வாகம் நேரடியாக பிறப்பு பதிவு அதிகாரிகளிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். வீட்டில் பிறந்தால்: வீட்டின் தலைவர் அல்லது நெருங்கிய உறவினர்கள் பிறப்பை கீழ் கண்ட அதிகாரிகளிடம் பதிவு செய்து கொள்ளலாம். பிறந்த இந்திய குடிமகனின் பிறப்பு சான்றிதழ் அதன் பொறுப்பு அதிகாரிகளிடம் பெற்று கொள்ளலாம். மேலும் பிறப்பு பதிவு, எந்த ஊரில் குழந்தை பிறக்கின்றதோ அதை கொண்டு தான் பதிவு செய்யப்படுகின்றது. உதாரணமாக காசாங்காட்டிலிரிந்து தஞ்சாவூர் சென்று அங்குள்ள மருத்துவமனையில் குழந்தை பெற்று கொண்டால், தஞ்சாவூர் நகராட்சியிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். வெளிநாட்டில் குழந்தை பெற்றால் அங்குள்ள இந்திய தூதரகத்தின் மூலம் பிறப்பை பதிவு செய்து கொள்ளலாம். பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள்: கிராமம்: வருவாய் துறை அதிகாரி மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். நகரம்: நகரத்தில் உள்ள நகராட்சியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மாநகரம்: மாநகரத்தில் உள்ள மாநகராட்சியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். வெளிநாடு: அங்குள்ள இந்திய தூதரகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பிறப்பு பதிவு வைக்கப்பட்டுள்ள இடம்: கிராமத்திற்கு: முதல் இரண்டு வருடத்திற்கு வட்டாச்சியர் அலுவலகத்தில் தக்க வைக்கப்படும். பிறகு சார் பதிவாளர் அலுவலத்தில் தக்க வைக்கப்படும். நகரம்/மாநகரம்/வெளிநாடு: நகராட்சியிடம்/மாநகராட்சியிடம்/இந்திய தூதரகத்தில் பாதுகாக்கபடும். மேற்கொண்ட தகவல்களில் பிழைகள்/திருத்தங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும். |
பரிவர்த்தனை >