1956'ல் இந்து வாரிசு சட்டம் முதலில் எழுதப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் இந்து குடும்பத்தின் சொத்து மகன்களுக்கே சேரும். மகள்களுக்கு வரதட்சணை, முழுச்சீர், வரிசை செய்வது நடைமுறையில் இருந்தது. இந்த சட்டம் 14 சனவரி 1990 வரை செல்லும். சான்றாதரவு: சட்டத்தின் கோப்பு தமிழ்நாடு மாநில அரசு சட்ட இந்து மத வாரிசு சட்ட திருத்தம் 1990'ன் படி (Act 1 of 1990) 15 சனவரி 1990'ம் ஆண்டு அல்லது அதற்க்கு பின் பரம்பரை சொத்தில் மகன்களுக்கும், மகள்களுக்கும் சம உரிமை உண்டு. சான்றாதரவு: சட்ட சுட்டி மத்திய அரசின் 2005 ஆம் ஆண்டு திருத்தம் செய்த இந்து மத வாரிசு சட்டத்தில், ஒரு இந்து குடும்பத்தில் மகன்களுக்கும், மகள்களுக்கும் அசையும் மற்றும் அசையா சொத்துக்களில் சம உரிமை உண்டு. இது செப்டம்பர் 9 ஆம் தேதி 2005'ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. சான்றாதரவு: சட்டத்தின் கோப்பு மேலே குறிபிடப்பட்டுள்ள தேதிகள் வாழ்க்கையில் இரண்டு தேதியோடு ஒப்பிடலாம்.
|
பரிவர்த்தனை >