தமிழ்நாடு சட்டம் இயற்றும் குழுமம்


தமிழ்நாடு அரசு வெளிட்டுள்ள (Act  16 of 2010) வெளியீடு இப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசாங்கத்தின் இது ஒரு மாநில அரசியலமைப்பு பிரிவு. (விதான் பரிசத்)
இது ஒரு நிரந்தர மேல் சபை. இதை கலைக்க முடியாது.
தமிழ்நாட்டிற்கு மொத்தம் 78 இடங்கள். ஆங்கிலத்தில் இந்த உறுப்பினர்களை (MLC ) Member of Legislative Council என்று அழைக்கபடுகிறது.
இவர்களின் பதவி காலம் 6 வருடங்கள்.

ஒவ்வொரு பட்டம்/பட்டயம்/ஆசிரியர் பெற்ற குடிமகன்களுக்கே மட்டுமே இதில் வாக்களிக்கும் உரிமை வழங்கபடுகின்றது. இந்த உரிமை ஒரு சாதாரண குடிமகனுக்கு அல்ல.

காசாங்காடு கிராமத்தை பொறுத்த வரையில் 2010 அக்டோபர் அன்று தோராயமாக  (305 பட்டதாரிகள் + 32 பட்டயதாரிகள்) 337 நபர்களுக்கு வாக்களிக்கும் தகுதி உள்ளது. கிராம மக்கள் தொகையில் 10% இதில் பங்கு கொள்ள முடியும்.
இது தவிர ஆசிரியர்களுக்கும் இந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு குறைந்த பட்சம் மூன்றாண்டு அனுபவம் தேவை. குறைந்தது 10 வகுப்பு படித்திருக்க வேண்டும்.

வாக்களிக்கும் உறுப்பினர்கள்:

26 இடங்களை சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்வனர்
26 இடங்கள் ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் தலைவர்கள் தேர்வு செய்வனர்
7 இடங்களை பட்டதாரிகள் தேர்வு செய்வனர்
7 இடங்களை ஆசிரியர்கள் தேர்வு செய்வனர்
12 இடங்களை மாநில ஆளுநர் (Governer) தேர்வு செய்வார்.

உறுப்பினர்கள் தொகுதியில் பங்கேற்க தேவையான தகுதி:
 1. இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
 2. வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்
 3. புத்தி சுவாதீனம் இல்லாமல் இருக்க வேண்டும்
 4. ஓட்டாண்டியாக இல்லாமல் இருக்க வேண்டும்
பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்கள் இடங்கள் பிரிக்கப்பட்டுள்ள விபரம்:

காசாங்காடு கிராமம்  தமிழ்நாடு கிழக்கு மைய பிரிவில் இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாடு மைய பிரிவின் கீழ் வரும் மாவட்டங்கள்.
 1. அரியலூர்
 2. தஞ்சாவூர்
 3. திருச்சி
 4. திருவாரூர்
 5. பெரம்பலூர்
வாக்காளர் படிவம்:

பட்டதாரிகளுக்கு: படிவம் 18 தமிழில் / ஆங்கிலத்தில்
ஆசிரியர்களுக்கு: படிவம் 19 தமிழில் / ஆங்கிலத்தில்

சமர்மிக்கும் இடம்:  வட்ட அலுவலர் (Thasildhar), வட்ட அலுவலர் அலுவலகம், பட்டுக்கோட்டை
ஒப்புகை: சமர்பித்த பிறகு அலுவலர் பெற்று கொண்டதன் ஒப்புகையை (படிவத்தின் கீழே இருக்கும்) பெற்று கொள்ளுங்கள்

இது சம்பந்தமாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிறுவனங்கள்:
 1. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் - http://www.elections.tn.nic.in/tnmlc.html
 2. மக்கள் சக்தி கட்சி - http://www.loksatta.org/tn/


Ċ
Unknown user,
Oct 24, 2010, 12:14 PM
Comments